நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50வீத பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் உறுதி பத்திரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி இவ்வருட இறுதிக்குள் அதிகாரசபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறிய 50வீத பேருக்கு உறுதி பத்திரம் வழங்கப்படுமென நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்போது 14,542 பேர் வசித்து வருவதாகவும், இதன்படி முதற்கட்டமாக 50 வீதமானவர்களுக்கு உறுதி பத்திரம் வழங்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்தில், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்குவது துரிதப்படுத்தப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.