போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கை அதிகரித்து செல்வதால் காரணமாக சிறைச்சாலைகளில் தொற்று நோய் அதிகரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலை சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய ஹேமன்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையாகிய கைதிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்துள்ளதன் காரணமாக அவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வீதம் அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மூளை காய்ச்சல் நோயால் ஒரு கைதி மரணித்தமை உறுதிப்படுத்தப்பட்டதால் காலி சிறைச்சாலை நடவடிக்கைகள் மட்டுப்படுத்த சுகாதார பரிந்துரைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர தெரிவித்துள்ளார்.
காலி சிறைச்சாலையில் காய்ச்சல் நோய் அறிகுறி காட்டிய 8 கைதிகளை கராபிட்டிய வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற அனுப்பிவைத்துள்ளகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.