”எதிர்காலத்தில் நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” நாட்டின் சனத் தொகை குறைவடைந்து வருவதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. குறிப்பாக இலங்கையில் பிறப்பு வீதம், 25 % குறைவடைந்துள்ளமை இதற்கு பிரதான காரணமாக உள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கையுடன் 2022 ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்தால் பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 90,000 ஆகக் குறைந்துள்ளது.அதாவது 25% ஆகக் குறைந்துள்ளது. அதேவேளை நாட்டில் பிறப்புகளின் வீதம் குறைந்து இறப்புகளின் வீதம் வேகமாக அதிகரித்து வருகின்றன.
மேலும் இளம் சமூகத்தினர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருதால் எதிர் காலத்தில் இலங்கையின் சனத்தொகை கனிசமான அளவு குறையலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.