பங்களாதேஷில் நடைபெற்ற தேர்தலில் பிரதமரும், அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
300 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்ற தேர்தலில் 223 இடங்களில் அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுயேட்சை வேட்பாளர்கள் மொத்தமாக 63 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில் எதிர்க்கட்சிக் கண்டுபிடிப்பதில் தற்போது சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 80 விகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன நிலையில் இந்த தேர்தலில் 40 விகித வாக்குப்பதிவு மட்டுமே பதிவாகியதாக கூறப்படுகின்றது.
1996ல் முதன்முதலாக பிரதமராக ஹசீனா தெரிவு செய்யப்பட்டார். இதனை அடுத்தது 2009 ஆம் ஆண்டும் அதன் பின்னரும் என மொத்தமாக 5 முறை பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.