சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் விடயம் நியூசிலாந்து நாடாளுமன்றில் ஒரு இளம்பெண் பாரம்பரிய மொழியில் உரையாற்றிய வீடியோ.
நியூசிலாந்து 170 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஒரு இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றமை இதுவே முதல் தடவையாகும். மௌரி இனத்தை சேர்ந்த மைபி கிளார்க் தனது 21வது வயதில் நியூசிலாந்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரானர். இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக போராடி வருகிறார்.
மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா செய்துள்ளார். போர், ஒற்றுமை , வெற்றி , இன குழு பெருமை என்பவற்றை வெளிப்படுத்தும் விதமாக இந்த வழக்கம் பின்பற்றபடுகிறது.
அந்த வகையில் நியூசிலாந்தின் இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி முழக்கமிட்டு பேசியது பாராளுமன்றத்தை அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், “நான் உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்.. ஆனாலும் நான் உங்களுக்காகவே வாழ்வேன்,” என்று தெரிவித்தார்.
ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் இடையே உள்ள ஹன்ட்லி என்ற சிறு நகரத்தில் வசிக்கும் மைபி கிளார்க் தனது மௌரி இனத்தின் லூனார் காலண்டரின் படி குழந்தைகளுக்கு தோட்டத்துறை சார்ந்த கல்வியை கற்பித்து வருகிறார். அமைச்சர் என்ற பதவியை தாண்டி இவர் தன்னை மௌரி மொழியை காப்பாற்றவும், அதனை உலகறிய செய்யவும் நோக்கமாக கொண்டிருக்கிறார்.