திரைத்துறையின் உயரிய விருதான ‘81 ஆவது கோல்டன் குளோப் விருதுகள்‘ ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அறிவிக்கப்பட்டன.
அமெரிக்காவின் ‘பெவெல்ரி கில்ஸ்‘ நகரில் நடைபெற்ற குறித்த விருது வழங்கள் விழாவில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காடியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதை “ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்” வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோல்டன் குளோப் விருதுகளை வென்றவர்களது விபரம் பின்வருமாறு
சிறந்த திரைப்படம் (ட்ராமா) – ஓப்பன்ஹெய்மர்
சிறந்த நடிகர் (ட்ராமா) – சிலியன் மெர்பி (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை (மியூசிக்/கொமெடி) – எமா ஸ்டோன் (புவர் திங்கிங்)
சிறந்த நடிகை (ட்ராமா) – லிலி கிலாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்)
சிறந்த இயக்குனர் (ட்ராமா) – கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த திரைப்படம் (மியூசிக்/கொமெடி) – புவர் திங்கிங்
சிறந்த நடிகர் (மியூசிக்/கொமெடி) – பால் ஹியமதி (தி ஹொல்ட்ஓவர்)
சிறந்த துணை நடிகை (மோஷன் பிக்சர்) – டா வினி ஜோய் ரண்டொல்ப் (தி ஹொல்ட்ஓவர்)
சிறந்த துணை நடிகர் (மோஷன் பிக்சர்) – ராபர்ட் டவுனி (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த பாடல் (மோஷன் பிக்சர்) – வாட் ஐ வாஸ் மெட் பார் (பார்பி)