கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் தொடர்பில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளை (திங்கட்கிழமை) கலந்துரையாடப்படவுளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாக மாற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உணவுப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலால் 29 கைதிகள் நேற்று தப்பிச் சென்ற நிலையில், அவர்களில் 16 பேர் மாத்திரம் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.