நாடாளாவிய ரீதியில் இன்றைய தினம் சுகாரதார தொழிற்சங்க ஊழியர்களினால் பாரிய பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்கும் விதமாக சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து வைத்திய சாலைகளிலும் முப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.