“இலங்கை அரசாங்கமானது புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனம் இணைந்து சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகத் துறையினருடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கை வெற்றிகரமான முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கடன் வழங்குநர்களை கையாள்வதில் இவ்வாறான ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதுமட்டுமல்லாது வெளிநாட்டு நேரடி முதலீடு, ஏற்றுமதிகள் மற்றும் சேவைகள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.