அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சையின் 2 ஆம் பகுதி இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதலாம் பகுதி வினாத்தாளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற, உயர்தர விவசாய விஞ்ஞானப் பாடத்தின் 2 ஆம் பகுதியை பரீட்சைகள் திணைக்களம் இரத்து செய்வதாக கடந்த 12 ஆம் திகதி அறிவித்திருந்தது.
குறித்த வினாத்தாளின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது.














