மற்றுமொறு மாணவி டெங்கு நோயினால் உயிரிழந்த சம்பவம் ஹொரண பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
23 வயதான குறித்த மாணவி போருவதண்ட, மாப்புட்டுகல , மானெல் உயன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கொழும்பு கற்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மாணவி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.















