”ஈரான் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானைக் குறிவைத்து பாலோசிஸ்தான் பகுதியில் ஈரான் அரசு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையிலேயே பாகிஸ்தான் அரசு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஈரான் எமது மீது மேற்கொண்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இது எங்கள் வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல். இத் தாக்குதலினால் அப்பாவிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சிறுமிகள் சிலரும் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பில் ஈரான் அரசு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.