நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் போது வயோதிபப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் வெல்லம்பிடியவில் பதிவாகியுள்ளது.
மருத்துவச் சீட்டின்றி 89 தடை செய்யப்பட்ட மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச் சாட்டிலேயே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.