கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்ட 675 வாகனங்கள் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 1ஆம் திகதி முதல் கொழும்பு நகரில் சிசிடிவி மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 22ம் திகதி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை கண்டுபிடிப்பதற்காக, பொலிஸாரினால் செயல்படுத்தப்படும் புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் 108 சிசிடிவி கமெராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.