நிவின் போலி , சாய் பல்லவி , மெடோனா செபஸ்டியன் ஆகியோர் நடித்து 2015 ஆண்டு வெளியான திரைப்படம் பிரேமம்.
வெளியான நாள் முதல் அனைவருக்கும் பிடித்து போய் சாய் பல்லவியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஒரு மலையாள திரைப்படம் இன்றளவும் பேசப்படுகிறது என்பது ஆச்சர்யம் தான்.
தற்போது பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்யும் வழக்கம் ட்ரெண்டாகி வரும் நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தமிழ்நாட்டின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

















