பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று குழுகூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாட்களில் கட்சியின் யாப்பின் திருத்தம் செய்ததன் பின்னர், நிறைவேற்றுக்குழுவுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று சபைக்கு என்னால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதாவது கதிரையின் அடையாளத்துடன், ஐக்கிய மக்கள் முன்னணி என்ற பரந்த அமைப்பை நாம் உருவாக்கவுள்ளோம்.
ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
நாங்கள் அரசியலமைப்பை திருத்த வேண்டும்.
அந்த அரசியலமைப்புகளை எமது கட்சி தலைமையகத்தில் திருத்தம் செய்வோம்.
அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு
புதிய நிர்வாகிகள் சபையொன்றை நியமிக்க எதிர்பார்க்கின்றோம்.
வெற்றிலைச் சின்னத்தை பெறமுடியாது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
வழக்குத் தொடுத்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்கள் இராஜினாமா செய்து வெற்றிலையுடன் கூட்டணியில் இணைவார்கள்” என நம்புகிறோம் என மைத்ரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.