”நாட்டில் 4 வயது பூர்த்தியான சிறுவர்களில் 30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை ”2025ஆம் ஆண்டு முதல், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால், முதலாம் தரத்திற்குச் செல்லும் சிறுவர்களின், முன் குழந்தைப் பருவ வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளையும் அதற்கு ஏற்ற வகையில் மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.