வவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து 29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் அப்பெண் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார் எனப் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.