மாலைதீவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இதுவரை காலமும் 3 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையில் ஏற்பட்ட ராஜதந்திர சர்ச்சைக்களுக்கு பின்னர் மாலைதீவு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையே குறித்த பின்னடைவுக்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.