”இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்” என நேற்றைய தினம் வெளியான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பில், நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் மாவட்ட தலைவராக ஜகத் பிரியங்கர செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.