பாகிஸ்தானில் எதிர் வரும் 8 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ஒருவர் நேற்றைய தினம் (31) மர்ம நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய ‘ரெஹான் ஜெப் கான்‘ என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ‘ரெஹான் ஜெப் கானுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.