இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால், இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், இடைக்கால வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்திய நாடாளுமன்றத்தின் 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் 2024 ஜூன் 16 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வரவுசெலவு திட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிப்பதற்கும், தொழில் தொடங்க, வட்டியில்லா கடன் வழங்குவதற்கும் தலா 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வரும் 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும் எனவும் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்று நோயை தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சராகப் பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6ஆவது வரவுசெலவுத் திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.