இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், மேலும் 6 மாதங்களுக்கு அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்மாரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூச்சியின் (Aung San Suu Kyi) ஆட்சி கலைக்கப்பட்டு, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி 3 வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே இவ்வறிப்பு வெளியாகியுள்ளது.
இராணுவ ஆட்சி தோற்றம் பெற்றதையடுத்து அந்நாட்டில் ஜனநாயக ஆதரவாளர்களின் கிளர்ச்சி, சண்டை மற்றும் போராட்டங்களை ஒடுக்குவதில் இராணுவம் திணறி வருகிறது.
இந்நிலையில் மூவாண்டாக நடப்பில் இருக்கும் அவசரநிலையை மேலும் 6 மாதத்துக்கு நீடித்துள்ள இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing), ”இராணுவ ஆட்சியை எதிர்க்கும் அனைத்துச் சக்திகளையும் துடைத்தொழிப்போம்” என சூளுரைத்துள்ளார்.
இதேவேளை “மியன்மாரில் மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்” வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.