தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களுக்கு எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி சிகிச்சையைப் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 ஆம் திகதி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல கைது செய்யப்பட்டார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இவருக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தடுப்பூசிகளுக்குள் ஒருவகை பக்டீரியா காணப்படுவதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த தடுப்பூசி மருந்து விநியோகம் செய்யப்பட்ட தகவல்கள் மருத்துவ விநியோக பிரிவிடம் காணப்படுவதாகவும் விநியோகிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது