ஆட்சி மாற்றமொன்றின் ஊடாகத் தான் பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வினைக் காண முடியும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் தேர்தல் தொடர்பாக ஒரு வசனம் ஏதும் உள்ளதா? எம்முடன் இருந்தபோது இருந்த ரணில் விக்கிரமசிங்க அல்ல தற்போது ஜனாதிபதியாக இருப்பது.
அல்லாவிட்டால், அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்குமா?
ஜனாதிபதித் தேர்தல் உடனடியாக நடைபெற வேண்டும். இதனை நடத்த ஒக்டோபர்வரை காத்திருக்க வேண்டிய தேவைக் கிடையாது.
மக்கள் ஆட்சி மாற்றமொன்றை விரும்புகிறார்கள். எனவே, அரசாங்கம் இதற்கு செவிசாய்க்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த, எம்மால் முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் நாம் செய்ய தயாராகவே உள்ளோம்.
ஆட்சி மாற்றமொன்றின் ஊடாகத் தான் பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வினைக் காண முடியும்” என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.