ஆப்கானிஸ்தான் அணி, ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு முன்னதாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டித் தொடர்களுக்காக ஆப்கானிஸ்தான் அணி, இலங்கைக்கு வருகை தந்திருந்தாலும், நடப்பு சுற்றுப்பயணம் சற்று விஷேடமானதாக கருதப்படுகின்றது.
காரணம், இரு அணிகளுக்கிடையில் இம்முறைதான், முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெற்றிருந்தது.
கடந்த 2ஆம் திகதி கொழும்ப-எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றிருந்த போட்டியில், இலங்கை அணி, நான்கே நாட்களில் போட்டிகளை நிறைவுக்கு கொண்டுவந்து 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
தற்போது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதன் மூன்று போட்டிகளும் கண்டி- பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.
இந்தநிலையில், ஆதவன் இந்த ஒருநாள் தொடர் குறித்த சில விடயங்களை, தங்களது இரசிகர்களுக்கு அறியத் தர விரும்புகின்றது.
- அவையாவன,
இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஏழு முறை இலங்கை அணியும் 4 முறை ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. - இறுதியாக இரு அணிகளுக்கிடையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் அதிகபட்சமாக 498 ஓட்டங்களை மொத்த ஓட்ட எண்ணிக்கையாக பெற்றுள்ளார்.
- இலங்கை அணியின் வீரர்களை பொறுத்தவரை பெத்தும் நிஸங்க அதிகபட்ச மொத்த ஓட்ட எண்ணிக்கையாக 342 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
- இதேபோல, இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித அதிகப்பட்ச மொத்த விக்கெட்டுகளாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில், அதிகப்பட்ச மொத்த விக்கெட்டுகளாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.