விவசாயிகளைப் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டத்தின் மூலம் விவசாயிகளை அரசனாக்கும் சகாப்தம் உதயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொல்பித்திகம பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவார் மேலும் தெரிவிக்கையில்,
“விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும், நாட்டின் திட்டத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கும் தேசிய நிலக் கொள்கையை உருவாக்கி, விவசாய நிலம், அபிவிருத்தி நிலம்,குடியிருப்பு நிலம், வனவிலங்கு நிலம் போன்றவற்றை முடிவு செய்ய வேண்டும்.
அறிவு, நவீன மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய 3 முறைகள் மூலம், விவசாயிகளின் அறுவடை மற்றும் உற்பத்தித் திறனை பன்மடங்காக அதிகரிக்க முடியும்.
விவசாயியையும் சந்தையையும் இணைத்து ஸ்மார்ட் விவசாயியை உருவாக்கி, விவசாயிகளுக்கான செயலி உருவாக்கப்படும்.
ஒரு சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி ஆலை மாபியாவை நடத்தி விவசாயிகளையும் நுகர்வோரையும் அழித்து வருகின்றனர்.
சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை பலப்படுத்தி வெள்ளை யானையாக மாறியுள்ள நகல் சந்தைப்படுத்தல் சபையை பலப்படுத்தி, தனியார் துறையும், அரச துறையும் இணைந்து போட்டிச் சந்தையை உருவாக்கி நெல் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
தொழில்முறை விவசாயிகளை உருவாக்கி, விவசாய ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டு, தொழில்சார் ஸ்மார்ட் விவசாயியை உருவாக்கும் திட்டம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.