அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஆஸ்டின் (Lloyd Austin) திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ”70 வயதான லாயிட் ஆஸ்டின் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் தங்கி சிகிச்சை பெறுவார்” என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லொயிட் ஆஸ்டின் இதற்கு முன்னர், ‘தனக்கு புற்றுநோய் இருந்ததையும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததையும், வெளிப்படுத்தத் தவறியமைக்காக கடந்த டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்‘ என்பதும் குறிப்பிடத்தக்கது.














