காஸா பகுதியில் உள்ள ரஃபா மீது இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை நடத்தி வருவதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 31 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில், 3இல் ஒரு பங்கு மக்கள் குழந்தைகளாவர்.
இந்நிலையில் , பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு அறிவித்துள்ளார்.