நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவும் மொட்டும் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக தேர்தலை ஒத்திவைத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பை வழங்காது எனவும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும். ஆனால் நாடராளுமன்றத்திற்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மை அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டை இரத்தக் கடலாக மாற்றும் நெருக்கடியைத் தவிர்க்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வாய்ப்பு வழங்கினால் மக்கள் தங்கள் விருப்பப்படி முடிவுகளை எடுப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.