நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான உகந்த தருணம் இதுவல்ல என ஜக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் போர்வையில் அரசாங்கம் இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் ஒத்தி வைப்பதற்கு முயற்சிக்கின்றது.
இதற்கு நாம் இடமளிக்கபோவதில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற பெயரில் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீடிக்கச் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளார்.
இதனை நாம் அனுமதிக்கமாட்டோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாம் இருக்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.