”கடந்த ஜனாதிபதித் தேர்தலை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் தமக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு” அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டே அவர் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று அந்நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.