மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களால் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ தினத்தன்று குறித்த பொருளாதார மத்திய நிலையத்துக்குள் பிரவேசித்த இருவர் வர்த்தக நிலையொன்றில் காசாளராக பணியாற்றிய யுவதி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்த 45,000 ரூபாய் பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது