சுகாதார ஊழியர்களுக்கான டெட் கொடுப்பனவை வழங்குவதற்கும், சீருடை கொடுப்பனவை அதிகரிப்பதற்கும், மேலதிக நேர பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக அரச சேவை தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் டெட் கொடுப்பவை தங்களுக்கும் வழங்குமாறு வலியுறுத்தி, 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த 13 ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சுகாதார தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன எழுத்துபூர்வமாக உறுதியளித்ததையடுத்து, நேற்று காலை 6.30 மணியுடன் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையிலேயே சுகாதார ஊழியர்களுக்கான டெட் கொடுப்பனவை வழங்குவதற்கும், சீருடை கொடுப்பனவை அதிகரிப்பதற்கும், மேலதிக நேர பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக அரச சேவை தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அந்த கொடுப்பனவுகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பாக எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.