டெல்லியில் பெயிண்ட் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் அலிபுர் தயால்பூர் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையொன்றிலேயே நேற்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் இருந்த இரசாயனப் பொருட்கள் வெடித்து சிதறியதோடு அருகில் உள்ள கடைகளுக்கும் வேகமாக தீ பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரசாயன பொருட்கள் வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் 11 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை மீட்பு பணியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.