ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் உள்ளூர் அலுவலகத்தின் நடவடிக்கைகளை இடைநிறுத்த வெனிசுவேலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையை அந்த அலுவலகம் மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள வெனிசுவேலா, அதன் ஊழியர்களை 72 மணிநேரதிற்குள் வெளியேறவும் கால அவகாசம் வழங்கியுள்ளது.
தலைநகர் கராகஸில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அந்நாட்டு வெளிவிவகர அமைச்சர் யுவான் கில் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
நாட்டிற்கு எதிராக நிரந்தரமாக சதி செய்யும் சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் சட்ட நிறுவனமாக ஐ.நா. மாறிவிட்டது என்றும் வெனிசுவேலாவின் வெளிவிவகர அமைச்சர் கூறியுள்ளார்.
மனித உரிமை ஆர்வலர் ரோசியோ சான் மிகுவலின் தடுப்புக்காவல் குறித்து ஐ.நா, ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.