ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட அலெக்ஸ நெவால்னி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரஷ்யவில் பல தசாப்தங்களாக எதிர்க்கட்சி தலைவராக பதவிவகித்த 47 வயதுடைய அலெக்ஸ நெவால்னி இன்று (வெள்ளிக்கிழமை) சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் அலெக்ஸ நெவால்னியின் சட்டத்தரணி இந்த விடயம் தொடர்பாக இதுவரை எதுவித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நெவால்நிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.