காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மத்திய அரசினை காங்கிரஸின் தலைவர் கார்கேயும், ராகுல் காந்தியும் கடுமையாகச் சாடியுள்ளனர்.
இது கருத்துத் தெரிவித்த ” காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை மோடி தலைமையிலான அரசு முடக்கியுள்ளது எனவும் இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய வீழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பா.ஜ.கவால் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட பணம் தேர்தலில் பயன்படுத்தப்படுவதாகவும்,ஆனால்,தாம் பொதுமக்களிடம் பெற்ற நன்கொடை நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் கார்கே விசனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, சர்வாதிகாரத்தின் முன் ஒருபோதும் தாம் அடிபணிய மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.