பாங்கொக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று விடுதலை செய்யப்படுவார் என தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுப்பட்டமைக்காக 2023 ஆம் ஆண்டு தக்சினுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் உடல்நலக் குறைவு காரணமாக 74 வயதான தக்சின் விடுதலை செய்யப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.