சுமார் ஒரு மாத காலமாக மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 06.00 நிலவரப்படி, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 13 அடி 5 அங்குலமாகவும், காசல்ரீ நீர்த்தேக்கம் 08 அடியாகவும் குறைந்துள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் லக்ஷபான நீர்மின்சார அமைப்பின் கீழ் உள்ள நியூ லக்ஷபான, கனியன், பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் ப்ரோட்லேண்ட் ஆகிய 06 மின் உற்பத்தி நிலையங்களுக்கு, தேசிய நீர்மின்சார அமைப்புக்கு சொந்தமான, பிரதானமாக மவுஸ்சாகலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் விநியோகிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.