இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தேரர் தெரிவித்துள்ளார்.
உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் “நல்லிணக்கத்துடன் வாழ்ந்த மக்கள் மத்தியில் இன, மத முரண்பாடுகளை உருவாக்க பேராசை பிடித்த அரசியல்வாதிகள் முனைப்பு காட்டினர்.
மேலும் “தேசிய ஒற்றுமையை உருவாக்க பல விடயங்களைச் செய்யும் போது, இந்த அரசியல்வாதிகள் இவற்றை அழிக்கிறார்கள், ஒற்றுமையை அழிக்கிறார்கள்.
இன்று மரத்துடனும் கல்லுடனும் பேசுவது போல் உள்ளது. அது பரவாயில்லை.இப்போது நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றனர் இவர்கள் எப்போதும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
வாக்குகளுக்காகக் காத்திருந்து நாட்டை அபிவிருத்தி செய்வதில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.