தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். முன்வைக்கவுள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் பல்வேறு புதிய திட்டங்களுடன் தமிழக வேளாண் வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது . வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார்.
புதிய திட்டங்களுடனான வரலு-செலவு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் வேளாண் துறைக்கு, 38,904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.