நீர்க்கொழும்பு, பிடிபன பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான காணியை மீளப் பெற்றுத்தருமாறு, கொழும்பு பேராயர் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீர்க்கொழும்மைச் சேர்ந்த மீனவர்கள், பொரளை பேராயர் இல்லத்திற்கு முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள போராயர் இல்லப் பேச்சாளரான அருட்தந்தை சிரில் காமினி, “கத்தோலிக்க திருச்சபையினால் ஏலத்தின் ஊடாக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணியை தனியாருக்கு வழங்குவதற்கு எதிராகவே பேராயர் வழக்குத் தொடர்ந்தார்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த காணியை பரந்துபட்ட மீனவர்கள் பயன்படுத்துவதற்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பினை வெளியிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஏலத்தின் கட்டுப்பாடுகளும் முகாமைத்துவமும் இன்னமும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அத்தோடு, சிலர் மேற்கொள்ளும் பொய்யான பிரசாரங்களுக்கு மீனவச் சமூகம் ஏமாறக்கூடாது என்றும் இதனை பொது மக்களும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.