வடபிராந்தியத்திற்குள் காணப்படுகின்ற பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்குவதாக வடபிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் காஞ்சன பானகொட தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்க்கும் இலங்கை கடற்படையின் வடபிராந்தியக் கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் காஞ்சன பானகொடவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது “உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் அபிமானத்தை வெற்றிகொள்ளும் நோக்கில், கடற்படையின் வடபிராந்தியத்திற்குள் காணப்படும் சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான பூரண ஒத்துழைப்பை தாம் வழங்குவதாக வடபிராந்திய கட்டளைத்தளபதி இதன் போது உறுதியளித்துள்ளார்.