சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர இன்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்
அவர் ஏற்கனவே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில் அதற்கு மேலதிகமாக தற்போது சுற்றாடல் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த அமைச்சு பதவியை கெஹலிய ரம்புகவெல்ல வகித்திருந்த நிலையில் அந்த பதவி தற்போது ஜனக வக்கும்புரவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து கெஹலிய ரம்புகவெல்ல குறித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது..















