தென் கொரியாவில் 1000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டில் வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தென் கொரிய சுகாதார அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.