உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழுநோய் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவொன்று அடுத்த மாதம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் பத்து வருடங்களில் தொழு நோயை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கான வரைபடத்தை இக்குழு தயாரிக்கும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தொழுநோயாளிகள் 10% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.