சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பான அமைச்சின் இறுதிப் பிரேரணை எதிர்வரும் 28ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுகாதார தொழிற்சங்கங்களின் முன்மொழிவுகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு நேற்று சுகாதார அமைச்சில் சுகாதார செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தலைமையில் கூடியது போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர்.ரவி குமுதேஷ், தமது முன்மொழிவுகள் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் எடுக்கப்பட்ட தீர்மானம் உடனடியாக அமுல்படுத்தப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.