தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவின் உண்மைகளை சரிபார்க்க மார்ச் 04 ஆம் திகதி அழைப்பாணையை அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பிரேத்தி பத்மன் சூரசேன, அச்சல வென்னப்பு மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு அங்கமான தேசிய மக்கள் சக்தி அரசியல் கட்சியாகப் பதிவு செய்திருப்பது சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என நாகாநந்த கொடிதுவாக்கு மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலமைப்பின் 103(2) பிரிவின்படி, ஒரே கட்சியின் வெவ்வேறு கிளைகளை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்வது தேர்தல் சட்டங்களுக்கு முரணானது மற்றும் அதன் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ள உரிமையை மீறும் மற்றும் முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.