கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து இன்று (புதன்கிழமை) ஏழாம் ஆண்டை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
அத்துடன் கட்சி அரசியலை மழுங்கடித்து தேசத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றும் தேசத்தைப் பற்றி சுயநலமில்லாமல் சிந்திக்கும் எவருடனும், எனது மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆறு ஆண்டுகால பயணத்தில் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டோம எனவும், எது செய்யக் கூடாது, எதை செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.